November 14, 2013

முல்லைத்தீவைச் சேர்ந்த மனிதவுரிமை செயற்பாட்டாளர் கைது


ஐக்கிய தேசிய கட்சியின், ஐக்கிய ஒற்றுமை இயக்கத்தின் மனிதவுரிமைகள் விழாவின் இரண்டாவது நாள் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுதர்சன் என்னும் மனிதவுரிமை செயற்பாட்டாளர் எதுவித காரணமும் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் ரகசியப்பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள ஸ்ரீகொத்தாவிற்கு முன்னால்வைத்து பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இக்கைது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவுள்ளது. குறிப்பிட்ட இளைஞர் ஏன்கைதுசெய்யப்பட்டார் என்பது தொடர்பாக பெரும் சந்தேகங்கள் நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

Post a Comment