காலை (2013.09.11) யாழ் கஸ்தூரியார் வீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜனின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் தொலைபேசித் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த இலங்கைத் தொலைத் தொடர்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் எதுவித காரணமுமின்றி அங்கஜனின் அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளார்.
மேற்படி ஊழியர் தனது பணியினை மேற்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த அங்கஜனின் அடியாட்கள் குறித்த ஊழியர் வந்திருந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றுமாறு கட்டளையிட்ட போது, அதற்கு தனது பணி முடித்த பின்புதான் வாகனத்தை எடுக்க முடியும் என அவர் மறுத்தவேளையில் கடுமையான முறையில் தாக்கப்பட்டார். பட்டப்பகலில் பல பொதுமக்கள் முன்னிலையில் சர்வசாதாரணமாக இத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதானது ஆளுந்தரப்பு சார்பானவர்களால் யாழ்ப்பாண மாவட்டம் சர்வாதிகார ஆட்சிக்குள்ளாக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக விளங்குகிறதென மக்கள்.
.
.jpg)
No comments:
Post a Comment