இலங்கையில் நடைபெறவுள்ள
பொதுநலவாய நாடுகள்
தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய
பிரதமர் டேவிட் கமருனுக்கு அழுத்தங்கள்
பிரயோகிக்கப்பட்ட வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்களை கருத்திற்
கொண்டு மாநாட்டை புறக்கணிக்குமாறு பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சில
நாடுகளும்
மாநாட்டை புறக்கணிக்குமாறு கோரி வருவதா
தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர்
பின்னணியில் பிரித்தானியா மாநாட்டில்
பங்கேற்பது உசிதமாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது. கமரூன் மாநாட்டில் பங்கேற்றால் அது பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின்
ஆலோசனைகளை உதாசீனம் செய்ததாக
அர்த்தப்படும் என மனித
உரிமை செயற்பாட்டாளர் பிரட் கார்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment