முன்னணி தனது இரண்டாவது மேதினத்தை கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முதலாவது மேதினத்தை விட இம்
மேதினத்திற்கு அதிகளவு ஆதரவிணை தந்திருக்கின்றீர்கள். குறிப்பாக இளைஞர்கள்
தந்த ஆதரவு மிக மகத்தானது. அவர்கள் ஒவ்வொரு வீடு வீடாகச்
சென்று மேதினப்பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த
ஆதரவு எங்களுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.
அதுவும் சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் இந்த ஆதரவு எங்களுக்கு வலுவான தெம்பூட்டலைத் தந்திருக்கின்றது. தமிழ் மக்களின் இன்றைய காலகட்டம் மிகவும் சவால்கள் நிறைந்த காலகட்டம்.
ஒரு பக்கத்தில் சீறிலங்கா அரசு எமது தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில்
திட்டமிட்டு மேற்கொள்கின்றது.இதுவரை சட்டத்திற்கு புறம்பாக
மேற்கொள்ளப்பட்ட அழிக்கும் நடவடிக்கைகள் தற்போது சட்டத்தின்
துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றன அரசஇயந்திரமும் அதற்கேற்ற வகையில்
மாற்றப்படுகின்றது வகைதொகையில்லாமல் தமிழ்த்தேசத்தில் சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்த சர்வதேசம்
கையை விரித்து எமது மக்களை ஏமாற்றியுள்ளது. ஆட்சிமாற்றம் என்ற
இலக்கு மட்டுமே அவற்றிற்கு இருந்ததினால் மென்மையான
தீர்மானத்தை ஜெனிவாவில் அது எடுத்திருக்கின்றது. சர்வதேசம் இவ்வாறு நடந்து கொண்டமை அவர்களின் தவறல்ல. அது அவ்வாறு தான்
செயற்படும். அவர்களது நிகழ்ச்சி நிரலுக்குள் அழுத்தம் கொடுத்து எங்களின்
நலன்களின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலையும் இணைக்கவேண்டும்.
இவ்வாறு இணைப்பதில் தான் தமிழ்அரசியலின் கெட்டித்தனமும் நேர்மையும்
இருக்கின்றது. வெறுமனே சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால்
இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைமை தேவையில்லை துரதிஸ்டவசமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என தம்பட்டம்அடிக்கும்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இதில் கோட்டைவிட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் நிர்ப்பந்தம் கொடுத்தால் சர்வதேசம் அதற்கு பணிந்து தான்
ஆகவேண்டும். ஏனெனில் தங்களின் பூகோள
நலன்களை அடைந்து கொள்வதற்கு தமிழ் மக்களையே அவர்கள் கருவியாகப்
பயன்படுத்துகின்றனர். எங்களைப் பயன்படுத்தி தமது நலன்களைப் பெறும் போது எங்கள் நலன்களும் பெறப்படவேண்டும் என்பதே இயற்கை நீதி. இந்த
நீதியை வலியுறுத்தக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. இந்த வருடம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆறுதலை தந்த விடயம். தமிழக மக்களின்
எழுச்சி தான். அந்த எழுச்சி தமிழ்த்தேசிய அரசியல் போராட்டத்தை மீண்டும் சரியான
தளத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இதற்குஅப்பால்
தோல்வி மனப்பான்மையில் துவண்டுகொண்டிருந்த தமிழ்
மக்களுக்கு நம்பிக்கைத்தெம்பினையும் ஊட்டியிருக்கின்றது. சரியான நேரத்தில்
சரியான போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழக உறவுகளுக்கு என்றும் நாம் தலைசாய்க்கின்றோம்.
தமிழ்த்தேசியஅரசியல் சரியான பாதையில் செல்வதற்கு தளம்,புலம்,தமிழகம் மூன்றும்
ஒரே நேர்கோட்டில் வருவது அவசியம். இன்று அந்த நேர்கோட்டிற்கு மெதுவாக
ஆனால் உறுதியாக தமிழ்த்தேசியஅரசியல் வந்துகொண்டிருக்கின்றது. அன்பான மக்களே! மேற்கூறிய அரசியல் பின்புலத்தில்தான். நாம் இன்றைய
மேதினத்தை கொண்டாடுகின்றோம். கடந்த மேதினத்தில் அரசியல்
தீர்வு முயற்சிகள் 'இருதேசங்கள் ஒரு நாடு' என்ற வகையில் அமைதல் வேண்டும்.
தமிழர்தாயகத்தில் இடம்பெறும் திட்டமிட்ட
ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து போராடுவோம், போரினால் பாதிப்படைந்த
எமது உறவுகளுக்கு கைகொடுப்போம், தமிழ்அரசியல்கைதிகள் ,தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளது விடுதலைக்கு குரல்கொடுப்போம்,
இனப்படுகொலைக்கு சர்வதேச
விசாரணை தேவை என்பதை உலகிற்கு கொண்டுசெல்வோம்,
நல்லிணக்கஆணைக்குழு அறிக்கையிணை நிராகரிப்போம்.
இனப்பிரச்சிணைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில்
முன்வைக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை நிராகரிப்போம், தமிழ்த்தேசத்திற்கான சுயாதீன பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம். சிங்கள தேசத்தின்
அதிகாரத்தை எம்மீது திணிக்க முயலும் படையினரை அகற்றக்கோருவோம். இடம்
பெயர்ந்து வாழும் எமது மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப குரல்கொடுப்போம்,
சாதி,மத,பிரதேச,பால்பேதமற்ற தேசத்தை கட்டியெழுப்புவோம். என்கின்ற
தீர்மானங்களை எடுத்திருந்தோம். இந்தத் தீர்மானங்களை எம்மால் இயன்றவரை நடைமுறையிலும் நிறைவேற்றினோம்.
சிறைக்கைதிகள் கொலைகளுக்கு எதிரான
போராட்டம் ,கேப்பாப்பிலவு நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம்,
வலிவடக்கு நிலப்பறிப்புக்கு எதிரான போராட்டம் என்பவற்றினை நடாத்தினோம்
'இரு தேசங்கள் ஒரு நாடு' என்ற எமது இலக்கினை சர்வதேச அரங்குகளில் முறையாக
வெளிப்படுத்தினோம். போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புலம்பெயர்மக்களின் உதவியுடன் பல்வேறு நிவாரணச்
செயற்பாடுகளை முன்னெடுத்தோம் இவை போதுமானவை என நாம்
கருதவில்லை இனிவரும் காலங்களில் மேலும் வலுவாக இவற்றை முன்னெடுப்போம்.
கடந்தவருட தீர்மானங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனக்
உறுதிகூறுவதுடன் இந்த மே தினத்தில் பின்வரும் புதிய
தீர்மானங்களை மேதினப்பிரகடனமாக முன் வைக்கின்றோம். தீர்மானம் - 01 திட்டமிட்ட நிலப்பறிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப்பேராடுவேம். தமிழர் தாயகம் முழுவதிலும் திட்டமிட்ட வகையில் சட்டரீதியாக
நிலப்பறிப்பு முயற்சிகள் இடம் பெறுகின்றன. சிங்கள குடியேற்றங்களுக்கு அப்பால்
படையினருக்கான நிலப்பறிப்புத்தான் கொடூரமாக உள்ளது. தமிழர்தாயகத்தின் எந்த
பகுதிகளும் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. இந்த நிலப்பறிப்புக்கெதிராக
தாயகத்தின் அனைத்துப்பகுதிகளிலும்,புலம்பெயர் நாடுகளிலும்,தமிழகத்திலும்
வலுவான போராட்டங்களை முன்னெடுப்போம். இதன் முதல் கட்டமாக முறையான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளையும். முறையான
பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். தீர்மானம் - 02 தமிழ் மக்களை அவமானப்படுத்தும் ஜெனிவா தீர்மானத்தை நிராகரிப்போம். பிராந்திய,மேற்குலக சக்திகள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டும்
கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஜெனிவாவில் பலவீனமான
தீர்மானங்களை எடுத்திருக்கின்றன. நல்லிணக்கத்திற்கும் பொறுப்புக்கூறலுக்கும்
உள்ளக செயற்பாடுகளை அது வற்புறுத்தியிருக்கின்றது. இது இயற்கையின்
நீதிக்கு முரணானது என்பதோடு இனப்படுகொலைக்கு முகம் கொடுத்த தமிழ்
மக்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் நல்லிணக்கத்திற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய அரசியல் தீர்வையும்
பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச விசாரணையையும் வலியுறுத்துகின்றோம். தீர்மானம் 03 தற்போது பிராந்திய, மேற்குலக சக்திகளினாலும், தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினாலும் நகர்த்தப்படுகின்ற அரசியல் தமிழ்மக்களுக்கு எந்த வகையிலும்
உதவப்போவதில்லை என்பதால் அவற்றை நிராகரித்து சுயநிர்ணய பாதையுடன் கூடிய
மாற்று அரசியலை முன்னெடுப்போம். பிராந்திய மேற்குலக சக்திகளும் அவற்றின் முகவரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்
சரணாகதி அரசியல் பாதையினையே தேர்ந்தெடுத்திருக்கின்றன.பொறுப்புக்
கூறலுக்கு உள்ளக விசாரனையையும்,
நல்லிணக்கத்திற்கு 13வது திருத்தத்தினையுமே சிபார்சு செய்கின்றன. இந்த
அரசியல் தமிழ்த்தேச அழிப்பிற்கு துணைபோகின்ற அரசியல். இதனை முற்றாக
நிராகரிப்பதோடு பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச விசாரணையையும் நல்லிணக்கத்திற்கு' இருதேசங்கள் ஒரு நாடு' என்ற அடிப்படையிலான தீர்வையும்
உள்ளடக்கிய மாற்று அரசியலை தெளிவாக முன்னெடுப்போம். தீர்மானம் - 04 தமிழ்த்தேசத்தின் நலன்களின் அடிப்படையில் தமிழ்த்தேசத்திற்கான
அரசியல் ,பொருளாதார,சமூக,கலாச்சார
கொள்கைகளை உருவாக்கி முன்னெடுப்போம் எந்தஒரு அரசியல் செயற்பாட்டிற்கும் வலுவான கொள்கைகள் முக்கியமானவை.
எமதுகட்சி வலுவான அரசியல்கொள்கைகளை உருவாக்கி செயற்படுத்துகின்றது.
அதே போன்று வலுவான சமூக பொருளாதார கலாச்சார கொள்கைகளையும்
உருவாக்கி செயற்படுத்துவோம்.
சமூகக் கொள்கைகள் எமக்கிடையேஉள்ள பேதங்களை அகற்றி ஒரு தேசமாக
ஒன்றினைக்கச் செய்வதாகவும், பொருளாதாரக்கொள்கைகள் எமது உற்பத்தி சாதனங்களை வளப்படுத்துவதாகவும் ,கலாச்சார கொள்கைகள்
எமது மரபை மீள்வித்து எமது அகச் சுகாதாரத்தை பேணுவதாகவும் இருக்க
வழிசெய்வோம். தீர்மானம் - 05 தமிழ்த் தேசத்துக்கான வலுவான
வெளிவிவகாரக்கொள்கையை உருவாக்கி செயற்படுத்துவோம். எமது விவகாரம் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்டுவிட்டது. பல்வேறு சர்வதேச
சக்திகளும் எமது விவகாரத்தில் அக்கறை செலுத்த தொடங்கிவிட்டன.
இந்தநிலையில் நாமும் ஒரு கொள்கையின் அடிப்படையில் சர்வதேச
விவகாரங்களை கையாளவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இங்கு நாடுகளுக்கு மட்டுமல்ல தேசங்களுக்கும்
வெளிவிவகாரக்கொள்கையை வைத்திருக்க உரிமை உண்டு எந்த ஒரு வெளிநாட்டு கொள்கையும் தேசநலன்களில்
இருந்து எழுவதே அடிப்படையானதாகும். நாமும் நமது தேச நலன்களில்
இருந்து வெளிநாட்டுக்கொள்கையை உருவாக்கி செயற்படுத்துவோம். பிராந்திய,
சர்வதேச சக்திகள் தமது நலன்களில்
இருந்து செயற்படுவது எமக்கு பிரச்சனை அல்ல.அதற்காக
எமது நலன்களை விலையாக கொடுக்க நாம் தயாராகவில்லை. கூட்டுநலன்களின் அடிப்படையில் செயற்பட எப்போதும் நாம் தயாராக இருக்கின்றோம். தீர்மானம் - 06 நிலம்,புலம்,தமிழகம் என்பவற்றை ஓரு நேர்கோட்டில்
கொண்டுவந்து ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுப்போம். தமிழ்த்தேசிய அரசியலை சரியான தளத்தில்
கொண்டு செல்வதற்கு தளமும்,புலமும்,தமிழகமும்
ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமானதாகும். தற்போது கருத்து ரீதியாக
ஒருமைப்பாடு உள்ளது. அதனை செயல் ரீதியாகவும்
கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். தீர்மானம் -07 தமிழக மக்களின் எழுச்சியை நன்றியோடு வரவேற்பதுடன் இந்த
எழுச்சி தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் முன்னேற
முழுஒத்துழைப்பினையும் வழங்குவோம். முன்னரே கூறியது போல தமிழக மக்களின் எழுச்சி தமிழ்த்தேசிய
அரசியலை மீண்டும் சரியான பாபையில்
கொண்டுவந்து நிறுத்தியுள்ளதோடு தோல்வி மனப்பான்மையில் துவண்டிருந்த
எமது மக்களுக்கு புதிய உத்வேகத்தையும் தந்திருக்கின்றது. இதற்காக தமிழக
உறவுகளுக்கு குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு எமது மனமார்ந்த
நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை தமிழக மக்களின் பொதுக்கருத்தாக
கொண்டு வருவதற்கும் செயற்பாடுகளை இந்திய
மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் உதவுமாறு எமது உறவுகளை நாம்
வேண்டிக்கொள்கின்றோம். உங்களின் செயற்பாடுகளுக்கான
முழு ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். தீர்மானம் - 08 'உலகத் தமிழர்' என்ற பொது அடையாளம் வளர்ச்சிபெற நாமும்
ஒத்துழைப்பு வழங்குவோம். தமிழ்த்தேசிய அரசியல் விவகாரம் இன்று 'உலகத் தமிழர்' என்கின்ற
பொது அடையாளம் வளர்வதற்கும் காரணமாகியுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும்
தமிழ்மக்கள் உலகத்தமிழ்ர் என்கின்ற பொது அடையாளத்தின் கீழ்
இணைந்து வருகின்றனர். இந்த பொதுஅடையாளம் வளர்வதற்கு ஈழத் தமிழர்
விடுதலை அடைய வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
தமிழகத்திற்கு வெளியே கர்நாடகம்,மும்பாய் போன்றவற்றில் இடம்பெறும் போராட்டங்களும் , மலேசியாவில் இடம்பெறும் போராட்டங்களும்
இவற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த பொது அடையாளம் வளர்வதற்கு நாம்
எம்முடைய ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம். தீர்மானம் - 09 இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்க வலுவான அழுத்தங்களை கொடுப்போம். தமிழ்த்தேசம் இன்று பச்சை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவருகின்றது. இந்த
ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுவதற்கும்
பொறுப்புக்கூறுதலை இலகுவாக்குவதற்கும், போரினால் பாதிப்படைந்த
எமது உறவுகளின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச
பாதுகாப்புடன் கூடிய ஒரு இடைக்கால நிர்வாகம் சீறிலங்காஅரசின்
அதிகாரக்கட்டமைப்புக்கு வெளியே உருவாக்கவேண்டியது இன்று அவசியமாக உள்ளது.
இந்த இடைக்கால நிர்வாகத்திற்காக உலகமெங்கும் குரல்கொடுப்போம். இதன்
ஊடாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய அதிகார
மையம் ஒன்றை கட்டியெழுப்புவோம். தீர்மானம் - 10 இன ஒடுக்குமுறைக்கும் வர்க்கஒடுக்குமுறைக்கும் ஒருங்கே முகம்கொடுக்கும்
தமிழ்த்தொழிலாளர்கள், கூலிவிவசாயிகள், மீனவர்கள் என்பவர்களின்
உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். தமிழ்த் தெழிலாளர்கள், கூலிவிவசாயிகள், மீனவர்கள் என்போர் இன
ஒடுக்குமுறைக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும்
ஒருங்கே முகம்கொடுத்து வருகின்றனர். ஓப்பீட்டு ரீதியில் இன
ஒடுக்குமுறையே சகிக்கமுடியாததாகஉள்ளது. தமிழ்த்தொழிலாளர்களின்
வேலைவாய்ப்புக்களை தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களதொழிலாளர்கள்
பறித்தெடுக்கின்றனர். விவசாயநிலங்களை படையினர் ஆக்கிரமித்துள்ளதால் கூலிவிவசாயிகள் தொழிலின்றி தவிக்கின்றனர். மீனவர்களுக்கு நமது கடல்
இன்னமும் முழுமையாக திறந்து விடப்படவில்லை தென்னிலங்கையில் இருந்து வரும்
சிங்கள மீனவர்களின் ஆதிக்கம் வேறு அவர்களை கொடுமைப்படுத்துகின்றது.
இவர்கள் தம் ஒடுக்கு முறைகளில் இருந்து விடுபட நாம் ஓங்கிக் குரல்
கொடுப்போம். தீர்மானம் - 11 தமிழ்ப்பெண்கள் தாம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் ,சுமைகளிலிருந்தும்
விடுபட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோம். தமிழ்ப்பெண்களின்நிலை இன்று மிகவும் கவலைக்குரியதாக உள்ளது போர்
அவர்களுக்கு பல்வேறு புதிய
சுமைகளை கொடுத்துள்ளதேடு ஒடுக்குமுறைகளையும் அதிகரிக்கச்
செய்துள்ளது.
ஆண்துணையற்று குடும்பப் பொறுப்புக்களை தனியே சுமக்க வேண்டிய
நிலைக்கு எமது பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். உறவுகள் சிறையில் இருப்பதால் ஏற்படும் மனஅழுத்தங்கள் வேறு அவர்களை வாட்டிவதைக்கின்றது. இதற்குஅப்பால்
படையினரின் பாலியல்தொல்லைகள் தொடச்சியாக அவர்களை துரத்திக்
கொண்டிருக்கின்றது.
இந் நிலையில் சமூகமாக எமது பெண்களை பாதுகாக்கும் முயற்சியில் நாமும்
ஈடுபடுவோமம் அவர்களின் துயரங்களை சமூகத்தின் துயரங்களாக
ஏற்று அவற்றிலிருந்து விலக ஓத்துழைப்புக்களை வழங்குவோம்.
No comments:
Post a Comment