சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பத்
தீர்மானித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, கடிதம் மூலம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அமைச்சர் இதனைத் தெரியப்படுத்த உள்ளார். அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சில மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்
சிறிசேன, அங்கு விஜயம் செய்திருந்தார். அதன் போது குண்டு துளைக்காத வாகனமும், ஆயுத
படையினரின் பாதுகாப்பும் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள
விரும்புவதாக அமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தம்மை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பங்களில்
சுவிட்சர்லாந்து விஜயம் செய்த போது எவ்வித விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும்,
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்
இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து அறிந்து கொள்ள விரும்புவதாக அமைச்சர்
சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment