May 06, 2013

தமிழ் வின் இணையத்தை கண்டிக்கும் மாணவர்கள்

புலம்பெயர் மக்களை குழப்பும் தமிழ்வின் [lankasri ] இணையத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.


அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் "தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு' என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று //

ஒரு செய்தியினை தமிழ்வின் [lankasri ] என்னும் இணையம் செய்தி வெளியிட்டு புலம்பெயர் மக்களை குழப்புகின்றது. இந்த இணையம் மாணாவர்கள் போராடும் போது அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து மாணவர்கள் போராடுவதாக அன்று செய்திவெளியிட்டனர் நாம் அதற்க்கு கண்டனம் தெரிவித்தோம் . அதனால் அச் செய்தி உடனடியாக நீக்கப்பட்டது.

ஆனால் இன்று மாணவர்கள் அனைவரும் தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பை உருவக்கினர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர் நாம் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் உடனடியாக செய்தியை நீக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றோம் .

இவர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .


இது சு ப வீ மற்றும் திமுக உருபினர்களால் உருவாக்கப்பட்டது இதற்கும் தமிழீழ விடுதலைக்க போராடும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .


தமிழீழ உணர்வோடு போராடும் மாணவர்கள் பற்றிய செய்திகளை அரசியல் ஆதாயங்களுக்க திரிவு படுத்தி வெளியிடுவதை அணைத்து ஊடகங்களும் நிறுத்தி கொள்ளவேண்டும் .


தமிழ்வின் [lankasri ] நிறுவனம் மதுரையில் இருந்து இயக்குவது எமக்கு தெரியும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .

No comments:

Post a Comment