பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாகன உதிரிப்பாகங்களைத் திருடினார் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டகொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்த மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment