புலம்பெயர் தேசமெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வரும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகள் தமிழகத்திலும் எழுச்சியுடன் தொடங்கப்படுகின்றன.உருவாகிவரும் தமிழீழ சுதந்திர சாசனமானது உலகத் தமிழர்களின் முரசறைவாக எதிர்வரும் மே18ம் நாள் முரசறையப்படவுள்ளது.
இந்நிலையில் வரும் வியாழக்கிழமை (18-04-2013) தமிழகத்தில் எழுச்சிபூர்வமாக இதற்கான நிகழ்வு இடம்பெறுகின்றது.
செந்தமிழன் சீமான் - கொளத்தூர் மணி - தோழர் தியாகு - எழுத்தாளர் சூரியதீபன் - பேராசிரியர் ஜவாகிருல்லா - தோழர் மு.சாத்தப்பன் உட்பட பல தமிழின உணர்வாளர்கள் இந்த எழுச்சி அரங்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியப் பிரதிநிதிகளின் ஒருவரான பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்குகின்றார்.
இதேவேனை வழக்கறிஞர் பாண்டிமா தேவி அவர்களது நெறியாள்கையில் உருவான ஈழ மண்ணில் எரியும் நெருப்பாய் எனும் ஆவணபடமும் இந்நிகழ்வில் வெளியிடப்படுகின்றது.
மாலை 5 மணிக்கு சென்னை - மேற்குமாம்பலம் -எல்லையப்பன் கோவில் தெரிவில் சீனாவாசா திரையரங்கம் அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில இந்த எழுச்சி நிகழ்வு இடம்பெறுகின்றது.
தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் வேண்டிக் கொள்கின்றது.
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்....
No comments:
Post a Comment