அமெரிக்காவின் பொஸ்டன்
நகரில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துடன்
இலங்கை மற்றும்
பங்களாதேஷிக்கு தொடர்பு இருப்பதாக
குற்றம் சுத்தப்பட்டுள்ளது. ஈரானின்
புலனாய்வு அமைப்பு ஒன்றை மேற்கோள்
காட்டி, அமெரிக்க ஊடகம் ஒன்று இந்த
செய்தியை வெளியிட்டுள்ளது. பொஸ்ட்டனில் மரதன் ஓட்ட
நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் இந்த
குண்டுகள் வெடித்தன. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன்,
100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு, ஹிஸ்புல்லா என்ற
அமைப்பு தொடர்பு கொண்டிருப்பதாகவும்,
இந்த அமைப்பு பங்களாதேஸ் மற்றும்
இலங்கையில் செயற்பட்டு வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையில்
இருந்தே அமெரிக்கா சென்றிருப்பதாகவும்
ஈரானின்
புலனாய்வுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவின்
அரசாங்கமோ அல்லது அமெரிக்க புலனாய்வுத்
தரப்புக்களோ இந்த தகவல் தொடர்பில்
இன்னும் எந்த பதிலையும் வழங்கவில்லை.

No comments:
Post a Comment