சீனாவின் கொன்சு பகுதியில் புதிய இலங்கை தூதரக அலுவலகம் ஒன்றை அமைக்க சீனா இலங்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி சீனாவில் மூன்றாவது தூதரக அலுவலகத்தை திறக்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இதன் ஊடாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நல்லுறவு, பொருளாதார உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொன்சு பகுதி தூதரகத்திற்கான தூதுவரை இலங்கை ஏற்கனவே பெயரிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2007ம் ஆண்டு சீனாவின் சாங்காயிலும் 2009ம் ஆண்டு செங்டு பகுதியிலும் இலங்கை தூதரக அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவின் பிரதான வர்த்தக தலைநகரான கொன்சு பகுதியில் மூன்றாவது இலங்கை தூதரக அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

No comments:
Post a Comment