நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனன்யா. மலையாளத்தில் மோகன்லாலுடன் சிகார் உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு நாடோடிகள் படம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றுக் கொடுத்தது.
தொடர்ந்து தனுசுடன் சீடன், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம் உள்பட 8 படங்களில் நடித்து வருகிறார். அனன்யாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருடன் அனன்யாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் 2ந் தேதி (வியாழக்கிழமை) கேரளாவில் நடக்கிறது. திருமணத்தையொட்டி அனன்யா நடித்து வரும் படங்களை விரைவாக நடித்து முடிக்க உள்ளதாக அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் கூறினார்.


No comments:
Post a Comment