யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்துள்ளனர். கீரிமலை பகுதியின் J /226 ,J/225 ஆகிய பிரதேசங்களில் இன்று அதிகாலை இராணுவத்தினர். மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனைத்து வீடுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், அவரது அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்தனர்.
அத்துடன் வீடுகளில் முன்னாள் போராளிகள் யாராவது இருக்கின்றனரா என்ற விபரங்களை அளிக்குமாறும் கூறி வருகின்றனர். முன்னாள் போராளிகள் என்று யாராவது இருந்தால் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதே வேளை முன்னாள் போராளிகள் பலருடன் தொடர்பு கொண்டு அவர்களில் சிலரை பண ஆசை காட்டி தவறான வழிக்கு கொண்டு சென்று பல போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபட வைத்ததாகச் சந்தேகிக்கும் ஊத்தை சேது என்றழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் என்பவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment