தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாட்சி கூறிய பெண் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு மாத விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி முருகன் தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில் போலீஸாரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தந்தை மகன் இறப்பு விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு உரிய பாதுகாப்பும் ஊதியமும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment