கைதடி சித்த ஆயுர் வேத பீடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
பொலனறுவையைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு அனுமதிக்கப்பட்டவராவார்.
கடந்த இரண்டு நாள்களாக காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகளை அடுத்து கொரோனா சந்தேகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே நேற்றையதினம் கொரோனா சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீட மாணவி மற்றும் எழுவைதீவிலிருந்து யாழ்.போதனாவில் அனுமதிக்கப்பட்ட பொலநறுவையைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment