July 02, 2019

நாளைய நாள் தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பால்! மிகப் பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்

மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலநறுவையில் திறக்கப்படவுள்ளது.

நாளைய தினம் மைத்திரிபால சிறிசேனவினால் இவை பொலன்னறுவை புதிய நகரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இவையாகும். இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகத்தின் மூலம் பயனடைவதற்காக மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment