August 01, 2017

யாழ்.ஊடகவியலாளர்கள் துபாயில் பணமோசடி செய்ததாக சிங்கள ஊடகம் பொய் செய்தி வெளியிட்டு உள்ளது

யாழ்.ஊடகவியலாளர்கள் மூவர் துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பொய் செய்தி வெளியிட்டு உள்ளது.


துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும் , அவர்கள் அந்த நிறுவனத்தின் 11, 98000 துபாய் டினாரை மோசடி செய்ததாக செய்தி வெளியிட்டு உள்ளது.

அந்த செய்தி தொடர்பில் குறித்த இணையத்தளம் வெளியிட்ட புகைப்படத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளது.

குறித்த இணையத்தளம் தொடர்பில் யாழ்ப்பாணம் வருகை தந்த பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு யாழ். ஊடகவியலாளர்கள் கொண்டு சென்றனர். தான் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ்மா அதிபர் உறுதி அளித்துள்ளார்.

No comments:

Post a Comment