March 03, 2017

பிரித்தானியாவில் தொடரும் அகிம்சைப் போராட்டம்

TGTE  

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் , இளைஞர்கள் அணிவகுக்க மாபெரும் அறவழிப்போராட்டத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்திவருகின்றார்கள்.

தமிழீழம் 

அகிம்சைவழியில் ஐ.நா.வை நோக்கி நீதி கேட்டு தொடரும் இந்தப் போராட்டம், 10 டவுனிங் தெரு, வெஸ்ட்மின்ஸ்டர், லண்டன் (10 Downing Street , Westminster, London,SW14 2AA ) எனும் இடத்தில் இடம்பெற்று வருகின்றது.


தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கவும், தமிழ் மக்களின் சமகால பிரச்சனையை முன்னிறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை வரலாற்றில் இளைஞர் போராட்டம் எக்காலத்திலும் பல்வேறு பட்ட சமூகமாற்றத்திற்கும் எதிர்கால இனத்தின் விடிவிற்கும் படிக்கல்லாய் அமைவதே யதார்த்தம்.

 


இந்த வகையில் இந்த அறவழிப்போராட்டத்தில் மக்கள் அனைவரையும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் புலம்பெயர் இளைஞர் சமூகம் கோட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

No comments:

Post a Comment