தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் (2009) ஆள்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தமிழீழ ஆள்அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ஆள் அடையாள அட்டை மாத்தளன் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆள் அடையாள அட்டையில் காணப்படும் புகைப்படம் ஓரளவு தெரியும் நிலையில் இருப்பதினால், குறித்த ஆள் அடையாள அட்டையினை ஊடகத்தினூடாக வெளியிடுவதின் மூலம் அதில் அடையாளம் காட்டப்பட்டவர் தொடர்பான தேடல் யாருக்கும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் புகைப்படம் எதுவும் இல்லாத நிலையில் காணாமல் போனோரின் உறவினர் பலர் தமது பிள்ளைகளை தேடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment