December 05, 2016

இறைவன்தான் காப்பாற்றவேண்டும்- லண்டன் வைத்தியரும் முதல்வரை கைவிட்டார் விரைவில் முக்கிய தகவல்

முதல்வர் ஜெயலலிதா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அதிகபட்சமாக என்ன செய்யமுடியுமோ அதை செய்தாகிவிட்டது என்று என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டது. கடந்த 15 மணிநேரத்திற்கும் மேலாக அவரது உயிரைக்காக்க போராடி வருகின்றனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ரிச்சர்ட் பீலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகி விட்டது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ரீதியிலான சிகிக்சைகள் அளித்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் ரிச்சர்ட் பீலே தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே முழு அறிக்கை

 


ரிச்சர்ட் பீலேவின் இந்த அறிக்கை அதிமுக தொண்டர்களின் மிச்ச நம்பிக்கையையும் சிதைத்து விட்டது என்றே கூறவேண்டும்.

No comments:

Post a Comment