October 28, 2016

சுவீஸில் தமிழர் சுட்டுக்கொலை-தமிழர் கைது

 
 

சுவிட்சலாந்து நாட்டின் சொலத்ததூண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான 29வயது மதிக்கத் தக்க தமிழர் பலியானதாகவும்  கூறப்படும் அதே வேளை துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்ட தமிழர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப் படும் என பாதுகாப்புத் தரப்பு  குறிப்பிட்டுள்ளதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டவர் மறைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் பொலிசில் சரணடைந்துள்ளதாகவும் சுவிஸ் செய்திகள் தெரிவிக்கின்றன….

 

வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் அறிய இங்கே அழுத்தவும் Mann (29) am Bahnhof Solothurn angeschossen







ரங

No comments:

Post a Comment