October 25, 2016

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் திட்டமிட்ட படுகொலையை கண்டித்து இலங்கை பூராகவும் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ...

 
யாழ் பல்கலை மாணவர்கள் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் , இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களது கொலைக்கு நீதி கோரி பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
 
இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், மாணவர்கள்  சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கிழக்கு பல்கலை மாணவர்களினாலும் இன்று போராட்டக்கள் நடத்தப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment