அனுமதிசீட்டு இன்றி ரயில்வே நிலையத்துக்குள் தம்மை அனுமதிக்காவிட்டால், ரயில் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்த இலங்கையர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 10 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற இலங்கையர் ஒருவரே இந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதியன்று லிவர்பூல் நிலத்தடி ரயில் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்த வழக்கின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சுரேஸ்குமார் என்பவர் தமக்கு அகதி அந்தஸ்து கிடைக்காத காரணத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று விடயம் வெளியானது.
எனினும் குண்டுதாக்குதல் என்ற சொல்லை பொறுத்தவரை அது தற்போதைய சூழ்நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும். எனவே குற்றம் சுமத்தப்பட்டவருக்கு 10 மாத சிறைத்தண்டனையை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
No comments:
Post a Comment