September 16, 2016

விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் மேலவீதியை சேர்ந்தவர் பாண்டியன் (விவசாயி).  அவரது மனைவி கண்ணகி, வீட்டில் தையல் மிஷின் வைத்து தைத்து வருகிறார்.
இவரது மகன் விக்னேஷ் (26) இவர் மன்னார்குடி அர்பன் வங்கி பள்ளியில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, லார்டு செவன் ஹில்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பின்னர் நாமக்கல் சுரபி பாலிடெக்னில் டி.எம்.இ. படித்துவிட்டு சென்னையில் டிவிஎஸ் கம்பெனியில் 1வருடம் பணிபுரிந்து, பின்னர் டி.ஐ. சைக்கிள் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 1.5 வருட காலமாக தன்னை இணைத்து கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.  இன்று(15.9.2016) நாம் கட்சி தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து நடந்த கண்டன பேரணியில் கலந்துக்கொண்டு தனக்கு தானே தீவைத்துக்கொண்டதில் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அருகில் உள்ளவர்கள் அவர்மீது பற்றி எரிந்த தீயை அணைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பல நேர  சிகிச்சைக்கு பின்  பலனின்றி உயிரிழந்தார்.

1 comment:


  1. காவிரிப் பிரச்சனையின் தாக்கத்தை உணர்த்த விக்னேஷ் தேர்ந்தெடுத்த வழிமுறை சரியானதா.. www.manam.online/Social/2016-SEP-16/Vignesh-Commits-Suicide

    ReplyDelete