சிறுமி மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய சிறிய தயார் கைதுயாழ். நீர்வேலி பகுதியில் சிறுமி மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய சிறிய தாய் இன்று (வியாழக்கிழமை) மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிறுமி மீது ஈவிரக்கமற்ற முறையில் குறித்த பெண்மணி தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி இன்று சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment