1986ம் ஆண்டு வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலைக்கு சொந்தமான நிலமானது விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை மீண்டும் பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று வன்னி பாதுகாப்பு தலைமையகத்தில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபர் பாதுகாப்பு தரப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த நிலத்தை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:
Post a Comment