August 29, 2016

எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளை தமிழ் பாடசாலை அமைக்கப்படும்

எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளையில் தமிழ் பாடசாலை அமைக்கப்படும். அத்திட்டம் கைவிடப்பட மாட்டாது என உறுதியுடன் தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க தேசிய நல்லிணக்கமே அரசின் இலக்கு. அதனை சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.  

வத்தளை ஒலியமுல்லையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே     அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அமைச்சர்  இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


வத்தளை தமிழ் பாடசாலை அமைப்பது நிச்சயமாகும். எத்தனை தடைகள் வந்தாலும் சவால்கள் வந்தாலும் இது கைவிடப்படமாட்டாது. இத் திட்டத்தை நடைமுறைப்படுவத்துவதை தடுக்க முடியாது. எமது கடமையை நாம் நிறைவேற்றுவோம். நாட்டில் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது திட்டமாகும்.


இதனை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். இத்திட்டத்தை முன்னெடுப்பதை தடுத்து சீர்குலைக்க முயற்சித்து     சேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இனங்களிடைலேயே நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். சேதங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 





No comments:

Post a Comment