வீடுகள் கையளிப்பு வைபவத்தில் சம்பந்தர் ஜயாவை புறக்கணித்த சம்பூர் மக்கள்.
நேற்றய தினம் சம்பூர் மக்களுக்காக கனேடியமக்களின் நிதிஉதவியுடன் கட்டப்பட்ட விதவைகளுக்கான 18 வீடுகளை எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுசெயலாளருமான இரா. சம்பந்தர் கையளித்தார்.
தரமற்ற முறையில் அமைத்த இவ்வீடுகளின் கட்டுமான பணிக்கு அனுமதிக்கப்பட்டஅளவு சீமேந்து வழங்கப்படவில்லை 21 வேக் சீமெந்திற்கு பதிலாக 12 வழங்கப்பட்டது .இதனால் மழைகாலத்தில் வீடு இடியும் நிலை ஏற்படலாம் இதற்கு யார் பொறுப்பு என சம்பூர் கிராம தலைவர் திரு. ஜெயதாஸ் அவர்கள் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கட்டுமான பணிக்கு வேண்டப்பட்ட சீமெந்து நிலுவைகள் மற்றும் மேசன் நிலுவைகள் வழங்கப்படாதன் காரணத்தால் அங்கு குழப்பநிலை ஏற்படலாம் என்பதால் கோவிலில் வைத்து சாவிகள் வழங்கப்பட்டு ஒருசில வீடுகளுக்கு மட்டும் விஜயம் செய்தார்.






No comments:
Post a Comment