இடைக்கால தடை இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றமும் சசிகலா புஷ்பாவின் முன்ஜாமீன் மனுவை விசாரித்து வரும் 22-ந் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்கலாம் என கூறப்பட்டது. தற்போது தென்மாவட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக களமிறக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்மாவட்ட தொழிலதிபர் தயவில் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றவர் அவர். தென்மாவட்டம் ஒன்றில் மா.செ.வாகவும் இருந்து வருகிறார். இந்த தகவல் கிடைத்த உடன் அதிர்ச்சி அடைந்த போயஸ் கார்டன், தற்போது வார்னிங் கொடுத்திருக்கிறதாம். மேலும் முதல் கட்டமாக அவரது மா.செ. பதவி பறிக்கப்பட இருக்கிறதாம்.
தற்போதுதான் சசிகலா புஷ்பாவை அரசியலுக்கு கொண்டு வந்த அமைச்சர் சண்முகநாதனின் மா.செ. பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதேபாணியில் தம்முடைய மா.செ. பதவியை பறித்தால் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக பகிரங்க குரல் கொடுக்குமாறு அந்த எம்பிக்கு கொம்பு சீவிவிடப்பட்டு வருகிறதாம்.

No comments:
Post a Comment