August 08, 2016

முத்தமிழால் வழிபடும் மக்கள் முதல் முற்பத்துமுக்கோடி தேவர்கள் வரை ஈடாக போற்றி வணங்கும் நல்லைநகர் கந்தனக்கு இன்று கொடி

நல்லூர் கந்தனுக்கு அரோகரா அரோகரா..

முத்தமிழால் வழிபடும் மக்கள் முதல் முற்பத்துமுக்கோடி தேவர்கள் வரை ஈடாக போற்றி வணங்கும் நல்லைநகர் கந்தனக்கு இன்று கொடி


எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் யாழ்ப்பாண நல்லையம்பதிக் கந்தனுக்கு துர்முகி  மஹோற்சவம்  (08.08.2016) திங்கட்கிழமை  இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.






வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவம் 8.8.2016 திங்கட்கிழமை இன்று காலை 10.00மணியளவி  துவஜாரோகணம் [கொடியேற்றத்துடன்] ஆரம்பமாகியது

இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே



நல்லை நகர்க் கந்தரே பள்ளி எழுந்தருளாயே
இன்றைய கொடியேற்ற நிகழ்வு.  

No comments:

Post a Comment