கல்வியங்காடு விளையாட்டரங்கவீதிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு உரிமையாளரான செல்வரட்ணம் பிரதீபன் என்பவர் வீட்டு முற்றத்தில் நேற்றிரவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார். இவருக்கு அருகில் இவர் வளர்த்த உயர்ரக நாய் ஒன்றும் படுத்திருந்தது.
அப்போது எங்கிருந்தோ வந்த ராஜநாகம் ஒன்று பிரதீபனைக் கொத்துவதற்கு முயன்ற போது குறித்த நாய் பாய்ந்து சென்று அதைக் கௌவிக் கொண்டு அப்பால் சென்று அதனைக் கடித்துக் குதறியது. இதன் போது நாயை பல தடவைகள் பாம்பு தீண்டியதாகவும் தெரியவருகின்றது.
சுமார் பத்து நிமிடங்களாக பாம்பை தனது வாயில் கௌவி போராடிய நாயை அயலவர்கள் மீட்டு பாம்மையும் வலைக்கூண்டு ஒன்றில் அடைத்துவிட்டு நாயை மிருக வைத்தியரிம் கொண்டு சென்ற போது நாய் சில நிமிட நேரங்களில் உயிரை விட்டது.
எஜமானைக் காப்பாற்றிய அந்த நாயின் விசுவாசத்தை எண்ணி எல்லோரும் கண் கலங்கினர்

No comments:
Post a Comment