August 07, 2016

இளவாளையில் அநாதரவாக உயிருடன் சிசு மீட்பு

யாழ்ப்பாணம் இளவாளை வடலியடைப்பு பகுதியில் பிறந்து 10 நாட்களேயான குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடைப்பு பகுதி கோயிலுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் மீட்டு, இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தெல்லிப்பளை மருத்துவமனைக்குச் கொண்டுச் செல்லப்பட்ட குறித்த குழந்தை, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இளவாளை பொலிசார் விசரானைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment