August 09, 2016

கரும்புலி மேஐர் ரட்ணாதரன் அண்ணாவின் 17ம் ஆண்டு நினைவு நாள் ..

கரும்புலி மேஐர் ரட்ணாதரன் அண்ணாவின் 17ம் ஆண்டு நினைவு நாள் ..




 மட்டக்களப்பு மாவட்டத்தில் பல படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் நடத்திக்கொண்டு வந்த சங்கிலியன் என்று அழைக்கப்படும் மேஜர் ரட்ணாயக்காவை 
கரும்புலி தாக்குதல் மூலம் தான் தாக்கி அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் அவர்களை கேணல் நாகேஸ்(நவம்ப சேரா) அண்ணா அவர்கள் தெரிவு செய்தார்

அதன்படியே அவருக்கான திட்டமிடல் பயிற்சியினை கேணல் ரமணன் அண்ணா அவர்களால் கொடுக்கப்பட்டது..
திட்டமிடல் பயிற்சி முடிந்ததும் 
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் அவர்களை 
வாகரை பிரதேசத்துக்கு அழைத்து செல்லும் பொறுப்பு லெப்டினன்ட் கேணல் ஜீவன் அண்ணா அவர்களிடம் கொடுக்கப்பட்டது
வாகரை பிரதேசத்துக்கு அழைத்து செல்லும் போது ரட்ணாதரன் அவர்கள் ஜீவன் அண்ணாவிடம் சொன்னாராம் அண்ணா நீங்கள் ஒரு பொறுப்பாளர்
நீங்கள் எப்படி முன்னுக்கு போவது பின்னுக்கு வாங்கோ நான் முன்னால் போகிறேன் என்று 
அதுக்கு ஜீவன் அண்ணா சொன்னாராம் இவ்விடத்தில் நீ ஒரு பெரிய வேலையை செய்யப்போகிறாய்
நான் ஒரு சிறிய போராளியாக இருந்து
உரிய இடத்தில் உன்னைக்கொண்டு சேர்ப்பது என் கடமை என்றாராம்.

தாக்குதலுக்கு போனதும்
அங்கே சங்கலியனை விட உயர் அதிகாரிகள் இரண்டு பேர் நின்றானுகளாம்
அவர்களை தாக்கும் படி ரட்ணாதரன் அவர்களுக்கு கட்டளையிடவும்
ரட்ணாதரன் அவர்கள் சொன்னாராம்
இவர்களை கொல்வதை விட
சங்கிலியனை கொல்லுவதுதான் சரி 
அவன்தான் எமது மக்களுக்கு பல கொடுமைகளை செய்துள்ளான் 
அவனைத்தான் நான் தாக்கி அழிக்க வேண்டும் என்று
அன்று அந்த தாக்குதல் நிறுத்தப்பட்டு
மறுநாள்   சங்கிலினை கொன்றொழித்து வீர காவியம் படைத்தான் ரட்ணாதரன்...


நன்றி road to EeLam 

No comments:

Post a Comment