அமைச்சர்களை சிறைக்குள் அடைத்தார் ஶ்ரீலங்கா ஐனாதிபதி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு!
ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலையில் மாத்தறையில் வைத்து அமைச்சர்கள் சிலரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் சிறையிலடைத்துள்ளார்.
இன்று காலை மாத்தறைக்கு விஜயம் செய்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலால் வரித் திணைக்களத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்ததோடு கட்டடத்தின் உள்ளே செல்லும்போது அங்கிருந்த சிறைக்கூண்டை கண்ணுற்று அமைச்சர்களையும் நாடளுமன்ற உறுப்பினர்களையும் பலவந்தமாக அதற்குள் தள்ளிப் பூட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை விளையாட்டாக ஐனாதிபதி செய்தாலும் எதிர்காலத்தில் கடந்த ஆட்சியில் ஊழல் புரிந்த பல அரசியல்வாதிகளை சிறையிலடைக்கும் செயற்பாட்டுக்கான அறிகுறியை ஐனாதிபதி மேற்கொண்டாரா என அரசியல் அவதானிகள் கேளிவியெழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment