துணுக்காய் கல்வி வலயத்துக்கு நிரந்தர கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி வலயத்தில் கடமையாற்றிய கல்விப் பணிப்பாளர் இரு மாதங்களுக்கு முன்னர் இடம்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நிரந்தரக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததன் காரணமாக துணுக்காய் கல்வி வலயம் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அதில் தவறு இடம்பெற்றுள்ளதன் காரணமாக மீளவும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார்

No comments:
Post a Comment