June 10, 2016

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் மோதல் ஏற்படும்-மஹிந்த தோல்வி அடைவர் என கூறிய சோதிடர்

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கைக்குள் பாரிய மோதலான நிலைமை ஏற்படும் என பிரபல சோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார்.

1988ம் 89ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு இணையான நிலைமையாக இருக்கும் எனவும் கிரக மாற்றங்களே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் இந்திக்க தொட்டவத்த கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment