June 28, 2016

வவுனியா வில்லேஜ் விஞ்ஞானி யாழில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு, அவருக்கு நடந்த சோகம்!

வவுனியா போலி விஞ்ஞானி ஜக்சன் யாழ்ப்பாணத்தில் வைத்துவிசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை ஜக்சன் கண்டு பிடிப்பு என்ற போர்வையில்‘மின்சாரம் இல்லாத பல்ப்‘ என்ற ஒன்றைத் தயாரித்துள்ளதாகக் கூறி  ஏமாற்றி 15 லட்சம் ரூபா பெற்றுள்ளார்.

இவனது கண்டு பிடிப்பு போலியானது என அறிந்த கனடா தமிழர் இவர் தொடர்பாக யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறித்ததாகத் தெரியவருகின்றது. முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட பொலிசார் வவுனியாவில் இருந்து ஜக்சனை அழைத்து யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து யாழ் நீதிமன்றில்   ஆயர்ப்படுத்திய போது 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்



Athirvu 

No comments:

Post a Comment