April 12, 2016

மக்கள் தேமுதிக கட்சியை வரவேற்கிறேன்: சீமான்

விஜயகாந்த்தின் கூட்டணி நிலைபாட்டில் அதிருப்தி அடைந்த சந்திரகுமார் மக்கள்  தேமுதிக  கட்சி  ஆரம்பித்ததை  வரவேற்பதாக  நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். 


தத்துவத்தை முன்னிறுத்தி போராடுகிறவன் தலைவனை முன்னிருத்தமாட்டன் என்றும், கொள்கையும் தத்துவமும் தான் முக்கியம் என நினைப்பவர்களால் தவறான இடத்தில் நிலைத்திற்க முடியாது எனவும் சந்திரகுமார் குறித்து சீமான் கூறினார். 

கோபிச் செட்டி பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய சீமான்,    அதிமுகவிடமிருந்து  அழைப்பு  வராத காரணத்தினால் வேறு வழியின்றி  மக்கள் நலக்கூட்டணிக்கு ஜி.கே.வாசன் சென்றுள்ளதாகக் கூறினார். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சீமான் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சங்கீதா பிறந்து 3 மாதமே ஆன தனது கைக் குழந்தையுடன் பங்கேற்றார்.  அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே வேட்பாளராக களம் இறங்க துணிந்து சம்மதம் தெரிவித்ததாக சீமான் கூறினார். 

No comments:

Post a Comment