April 21, 2016

கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆசிரிய மாநாடு சிறப்புற நடைபெற்றது.

கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்பட்ட ஆசிரிய மாநாடு மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினம் காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தலைமையில் ஆரம்பமான ஆசிரிய மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் ஆசிரியர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் பெருமளவான ஆசிரியர்கள், அதிகாரிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேற்படி கிளிநொச்சி வலய ஆசிரிய மாநாட்டில் கல்விக் கண்காட்சி, கலை நிகழ்வுகள் என்பன இருநாட்கள் நடைபெற்று இன்றுடன் சிறப்பாக முடிவடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment