எல்பிட்டிய – ஊறுகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஸ்பிட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்ப்வம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. 52 வயதான நந்தசிரி சந்துருவன் சமரசிங்க என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் பகல் வேளையில் முச்சக்கர வண்டியொன்று செலுத்திக் கொண்டு குறித்த 52 வயதான குடும்பஸ்தர் சென்றுகொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ள அடையாளம் தெரியாத இரு ஆயுததாரிகள் ரீ 56 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த நபர் உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் அங்கு வைத்து அவர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இது வரை தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment