பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றிந்தார். தனது சேவைக்காலம் முடிந்து கடந்த 12ஆம் திகதி நாடுதிரும்பிய இவரை விமானநிலையத்தில் வைத்து சீ.ஐ.டி.யினர் விசாரணைக்குட்படுத்தியிருந்தனர்.
பின்னர் இன்று கொழும்பில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தவர் என்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஜெயகாந்தனின் குடும்பத்தினர் இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment