February 16, 2016

சிரியா : 'மருத்துவமனை மீதான தாக்குதல் போர்க்குற்றம்'

சிரியாவின் வடக்கு பகுதியில் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை பிரான்ஸ் மற்றும் துருக்கி ஆகியன போர் குற்றம் என்று கூறியுள்ளன.

இந்த பிராந்தியத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐநா கூறுகின்றது.

துருக்கிய பிரதமர் ரஷ்யா மீதே இந்த தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யா இன்னமும் இதற்கு பதிலளிக்கவில்லை.

அதேவேளை, சிரியாவில் மோதல் நிறுத்தம் கொண்டுவருவதற்கான திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸாத் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் உலக வல்லரசுகள் அங்கு இந்த வாரம் முதல் ஒரு மோதல் நிறுத்தத்தை அமல்படுத்துவது குறித்து உடன்பட்டிருந்தன.

No comments:

Post a Comment