பழையமாணவாகள் மற்றும் மாணவாகள் விசனம் வவுனியா வவுனியா தமிழ் மத்தியமாகிவத்தியாலயத்தில் மாணவாகள் சீரான முறையில் சீருடைகள் அணியாமல் வருவது தொடர்பில் ஒழுக்கத்தை கடைப்பிடித்து மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர் திடீரென வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி தி. திருவருள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியா தமிழ் மத்திய மாகாவித்தியாலயத்தில் மாணவர்கள் மாணவர்களுக்கு ஏற்காத சீருடைகளை அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்து வந்திருந்தமையை பழைய மாணவாகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன பாடசாலை நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.
இதன் காரணமாக பாடசாலையில் அக்கறை கொண்டு ஆசிரியர்கள் சிலர் சீருடை தொடர்பில் கவனமெடுத்து வந்திருந்தனர். மாணவர்களை சீருடையில் மாற்றத்தை செய்யுமாறு கோரியும் சில அதிகாரிகளின் பிள்ளைகள் என தம்மை அடையாளப்படுத்துபவர்கள் இதற்கு இடையூறாக காணப்பட்டதுடன் சீருடையை மிக மோசமாக அணிந்து வந்திருந்தனர்.
இதன் போது ஆசிரியர் ஒருவர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளாரின் மகனும் உள்ளடங்கியுள்ளார். இவ்வாறான நிலையில் அவ் ஆசிரியரை கல்வி அமைச்சின் செயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்துள்ளார்.
எனவே நாம் இந் நடவடிக்கை தொடர்பாக சட்ட நடவடிக்கையை கையாளவுள்ளோம் என தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment