தெமட்டகொடை கடத்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொடை பகுதியில் ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஹவ்லொக் டவுனில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்போது, அவர் பொலிஸாருடன் செல்வதற்கு தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று விடுமுறை ஆதலால், ஹிருணிகா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளார்.

No comments:
Post a Comment