January 04, 2016

அதிகளவான இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

அதிகளவான இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பி.பி.சி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


குறைந்தபட்சம் 36 இலங்கையர்கள் சிரியா சென்றுள்ளதாகவும் அதில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில இலங்கையர்கள் இரகசியமான முறையில் சிரியாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


எப்போது இந்த இலங்கையர்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள் என்பது தெளிவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறனெனினும், இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டமை குறித்து தெரியாது என இலங்கைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஜூலை மாதம் முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டமை குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment