பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி இலங்கையில் மீண்டும் புலிகளின் ஆக்கிரமிப்பை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காகவே இலங்கைக்கு சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்து வருகின்றனர் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விடுதலைப் புலிகளின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய அவர் இன்று நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி குறிப்பாக வடகிழக்கை பாதுகாப்பின் கீழ் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாக தெரிவித்த அவர் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் நாடு காப்பாற்றப்பட்டு விட்டது என்று கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
புலிகளின் அரசியல் சர்வதேச செயற்பாடுகள் தொடர்வதாக தெரிவித்த அவர் புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தினதும் தடைகளை நீக்கி அவர்களை இலங்கையில் அரசு பலப்படுத்தியிருப்பதாகவும் தடுப்பில் உள்ள புலிகளை விடுவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதனால்தான் புலிகள் தொடர்பில் பலமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் இன்றைய அரசாங்கம் நாட்டை இரண்டாக கூறுபேர்டும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடுகிறார்.
நாட்டை புலிகளுக்கு ஒப்படைக்கும் நோக்கிலேயே ஐ.நா அதிகாரிகளும் அமரிக்க ராஜதந்திரிகளும் வருகை தருவதாகவும் எதிர்வரும் ஜெனீவா கூட்டத் தொடருடன் இலங்கையில் நிரந்தரமாக பிரிவினையை ஏற்படுத்துவதே அவர்களின் முயற்சி என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment