December 10, 2015

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் நாள் நிகழ்வுகள் வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளன. 

மேற்படி அமைப்பின் தலைவர் அ.சத்தியானந்தம் தலைமையில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றன.

'சரிநிகர் சமனாக வாழ்வோம் இந்நாட்டிலே' என்னும் தொனிப்பொருளை முதன்மைப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல்பீட குடிசார் எந்திரவியல் துறைத் தலைவரரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.எஸ்.சிவகுமாரும் கலந்துகொண்டு மனித உரிமைகளை வலியுறுத்தி தனது கருத்துரைகளை வழங்கியிருந்தார.

 கிளி.பாதர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மற்றும் இந்நிகழ்வில் 'மனித உரிமைகளும் வாழ்வியலும்' என்னும் தலைப்பில் அருட்தந்தை எஸ்.பி.செல்வனும் 'மனித உரிமைகளும் மக்கள் அரசியலும்' என்னும் தலைப்பில் தமிழ் சிவில் சமூகத்தின் இணைச்செயலாளர் பி.என்.சிங்கமும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். 

மற்றும் இந்நிகழ்வில் பெருமளவான மனித உரிமைகள் ஆர்வலர்களும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் ஆசிரியர்கள், அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவைப்பாடு, இந்நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












No comments:

Post a Comment