பரந்தன் முறிகண்டி பிரதேசத்தில், இன்று (புதன்கிழமை) புகையிரதத்தில் மோதுண்டு கரடியொன்று உயிரிழந்துள்ளது.
காட்டு மிருகங்கள் அதிகமாக நடமாடும் இப்பிரதேசத்தில் அருகிவரும் உயிரினங்களான கரடி, மான், மயில் மற்றும் யானை என பல உயிரினங்கள் இவ்வாறு அண்மைய காலமாக உயிரிழந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வடக்கிற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இவ்வாறான உயிரழப்புகள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அருகிவரும் இவ்வாறான உயிரினங்கள் பாதுகாக்கப்படவேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.
ஆகவே வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment