சர்வதேச போட்டிகளிலிருந்து தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மக்கலம் (34) அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் தனது இறுதி தொடராக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அணிக்காக விளையாடியமை தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மக்கலம், காலத்தின் தேவைப்பாடு காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் மக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment