December 05, 2015

இலங்கையிலும் இந்தியாவிலும் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மூழ்கும் அபாயம்!

தற்போது  பெய்த மழையைவிட பலமடங்கு மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல  EL Nino சூழற்சிப்  புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதுவரை அடித்த சுழற்சிப் புயலால் பெய்த மழையினால் தென் இந்தியாவின் அதாவது தமிழ்நாட்டு கடற்கரையோரங்கள் குறிப்பாக சென்னை நகரம் கடுமையாக  பாதிக்கப்பட்டதுடன், 260 க்கும் மேற்பட்டோர் இக்கடும் மழை வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்ததாகவும் மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் தென் இந்தியாவை தாக்கிய இச் சுழற்சிப் புயல் இலங்கையையும் தாக்கும் எனவும் நாசா மேலும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்  இலங்கையில் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவசர அவசரமாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சாலைகளும் வீதிகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்சாலையில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லல ஆகிய இடங்களிலும், மன்னார்-புத்தளம் சாலையில் எழுவான்குளத்திலும் இப்படியான நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.
புத்தளம், மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாதுப்புகள் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அறிக்கை பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ளது.்

வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மழையுடன் கூடிய கால நிலை இலங்கையிலும் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment