December 18, 2015

சுவிஸ் ஈழத்தமிழரவையின் மே 18 தமிழ் இனப்படுகொலை நாளும் மாபெரும் தமிழின எழுச்சி மாநாடும்.

சிறீலங்கா பயங்கரவாத அரசால் இன்றும் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனப்படுகொலையை சுவிஸ் சமூகத்திற்கு வெளிக்கொண்டுவரவும் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டியும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிகொள்ளும் மாபெரும் தமிழின எழுச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 7 வருடங்கள் அண்மிக்கும் நிலையிலும் எவ்வித தீர்வுமின்றி தமிழீழ மக்களின் நிலை தொடரும் சூழலில் ஒன்றுபட்ட தமிழ் மக்களின் ஒருமித்த எழுச்சியும், திரட்சியுமே நம்மை ஓர் பேரம்பேசும் சக்தியாக அரசியல் ரீதியாக முன்னிறுத்தும்.

இச்சூழலில் எமக்குள் புதரோடிப்போயிருக்கும் தோல்விமனப்பாண்மைகள், சோர்வுணர்வுகள், வெறுப்புக்கள் , வேற்றுமைகள், பேதங்கள் என அனைத்தையும் ஒருதரம் ஒதுக்கிவிட்டு அரசியல் கையறுநிலையில் நிர்க்கதியாய் நிற்கும் எமது தமிழீழ மக்களின் மறுவாழ்வை புனரமைத்து, எமது தமிழீழம் நோக்கிய பயணத்தின் பாதையை புத்துயிர் ஊட்டி, மக்கள்மயப்படுத்தப்பட்டு 12 கோடி தமிழர்கள் பங்கெடுக்கும் மாபெரும் தமிழ்த் தேசிய அரசியல் களத்தை திறக்க நாம் எல்லோரும் ஒண்றிணைவோம்.

தமிழீழ விடுதலைப்பயணத்தில் மாபெரும் பங்காற்றி, ஆற்றிக்கொண்டிருக்கும் எமது தமிழீழ உறவுகள் மலர இருக்கும் 2016 ஆம் ஆண்டை விடுதலையின் எழுச்சி ஆண்டாக மாற்றி அமைக்க முன்வரவேண்டும். தமிழர்கள் உலகில் எங்கு நசுக்கப்பட்டாளும் நாம்  கிளர்ந்தெழும் சக்தியாக மாறவேண்டும்.

எதிர்வரும் மே 18 இல் மண்ணுக்காய் வீரகாவியமாகிய மாவீரர்களையும், மானச்சாவேந்திய மக்களையும் நெஞ்சில் நிறுத்தி அனைவரும் பொதுவான தமிழ்த் தேசிய செயற்பாடொன்றிற்குள் காலடி எடுத்த வைக்க வேண்டும். அதற்கு வழிதிறக்கவே சுவிஸ் ஈழத்தமிழரவை  நீண்ட நாள் செயற்திட்டத்துடன் கூடிய இந்த மே 18 ஐ மையப்படுத்தி இவ் எழுச்சி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது

இவ் வரலாற்றுக்கடமையில் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியத்துறையினர், தலைவர்கள், மற்றும் ஊடகத்துறையினர், என அனைவரும் தங்கள் பேராதரவை தந்துதவுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பல இளையோர்கள் கூடி முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு வலுச்சேர்க்க உங்கள் அனைவரது வினைத்திறன்மிக்க உதவிகளையும் எமக்கு தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். எம்முடன் தொடர்புகொள்ள:

  • குருசாமி குருபரன் : 079 193 86 69
  • ஜெகன்மோகன் காண்டீபன் : 076 328 58 99

வீச்சுப்பெறும் விடுதலையின் வழியில் கைகோர்த்து இளைய தலைமுறையின் செயலுக்கு வலுச்சேர்க்க அணிதிரண்டு வருக என அழைக்கின்றோம்.

காலம்: 18. 05. 2016 புதன்கிழமை

நேரம்:14:00 மணி தொடக்கம் 17:00 மணி வரை

இடம்: சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக  (Bundesplatz, Bern)

அனைத்து மாநிலங்களிலிருந்தும் வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. வாகன ஒழுங்குகளிற்கு அருந்தவநாயகம் பிரபாகரன்: 076 568 14 55

அகதி வாழ்வும் அவல வாழ்வும் கதியாய்யான எம்மினத்தின் இரும்புக் குரல்களாக முழக்கமிடஉரிமையோடு அழைக்கின்றோம் உங்கள்  சுவிஸ் ஈழத்தமிழரவை.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. தமிழீழ தேசியத்தலைவர் – வே. பிரபாகரன்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:

Post a Comment